இந்தியா
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
- புதிய ஆளுநராக வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்.
- வரும் 11ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மல்ஹோத்ரா பதவியில் இருப்பார் என தகவல்.
மத்திய வருவாய் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், புதிய ஆளுநராக வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, வரும் 11ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மல்ஹோத்ரா பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.