காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத அம்மாவை கொலை செய்த மகன்
- தான் காதலித்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சவான் தனது தாயிடம் கூறியுள்ளார்.
- அவரது தாய் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
டெல்லியில் தனது தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
சவான் என்ற 22 வயது இளைஞர் போலீசாருக்கு போன் செய்து தனது தாயார் கொல்லப்பட்டதாகவும், அவரது காதணிகள் திருடப்பட்டதாகவும் கூறினார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளை நடந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் விலைமதிப்பு அதிகம் உடைய பொருட்கள் வீட்டில் இருந்ததை போலீசார் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுலோச்சனாவின் இளைய மகன் சவான் தான் தனது தாயாரை கொலை செய்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "சவானின் அண்ணன் கபிலுக்கு (27) விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து தான் நீண்ட நாட்களாக காதலித்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சவான் தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது தாய் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். மேலும் உன் விருப்பப் படி நீ திருமணம் செய்தால் சொத்தில் ஒரு பங்கை கூட தரமாட்டேன் என்று அவரது தாயார் எச்சரித்துள்ளார். இதனால் மனமுடைந்த சவான், தனது தாயாரை கொலை செய்ததாக" தெரிவித்தனர்.