பழமைவாய்ந்த பாலம் இடிந்து விபத்து- பள்ளத்தில் கார்கள் சிக்கியதால் பரபரப்பு
- விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது.
- அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும்.
ஒடிசா மாநிலம் கலஹாண்டி மாவட்டம் பவானிபட்னாவில் உள்ள பாகீரதி பூங்கே அருகே நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில், அந்த வழியாக சென்ற இரண்ட கார்கள் பள்ளத்தில் விழுந்து சிக்கின. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காருக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின்னர், கார்களை மீட்கும் பணியில் ஈடுட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானிபட்னாவை அடைய துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபுர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம், 1925-ம் ஆண்டு காலாஹண்டி சமஸ்தானத்தின் பொறியியல் துறையால் கட்டப்பட்டது.
இந்த விபத்து பவானிபட்னா மற்றும் துவாமுல் ராம்பூர் மற்றும் காஷிபூர் இடையேயான சாலை இணைப்பை துண்டிக்கப்பட்டது என்றும் பாலம் இடிந்து விமுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாள்ர் அஜித்பாபு தெரிவித்தார்.
மேலும், அந்த இடத்தில் 40 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்படும் என்றும் கூறினார்.