இந்தியா
null

நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் மரணம்

Published On 2022-08-23 06:46 GMT   |   Update On 2022-08-23 09:47 GMT
  • நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார்.
  • பிரபலமானதைத் தொடர்ந்து 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

சண்டிகர்:

கோவாவில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நடிகை சோனாலி போகட் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

நடிகை சோனாலி போகட் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக் டாக் வீடியோக்களில் பிரபலமானார். 2020-ல் நடந்த பிக் பாஸ் ஷோவிலும் கலந்து கொண்டார். பிரபலமானதைத் தொடர்ந்து 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார்.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜனதாவில் சேர்ந்த நிலையில் அவர் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இந்த இடைத்தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக சோனாலி போட்டியிடபோவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். அவர் கோவாவிற்கு நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இந்த திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

Tags:    

Similar News