மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது: அமித் ஷா
- தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர்.
- பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர்.
புதுடெல்லி:
மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,
சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.
சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
— Amit Shah (@AmitShah) December 11, 2023
ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது… pic.twitter.com/yKAuFjLMtF