இந்தியா

ஆந்திராவில் கவர்னருடன் மோதல் இல்லை- ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி

Published On 2023-02-25 05:32 GMT   |   Update On 2023-02-25 05:32 GMT
  • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் எனக்கு நல்ல நண்பர்தான்.
  • என்னுடைய பொறுப்பான முயற்சிகள் அவர்களுடைய இதயத்தை மென்மையாக்கும் என்று நான் நம்புகிறேன்.

திருப்பதி:

ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர், முதல்-அமைச்சர் இடையே மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், என்னுடைய மாநிலத்தில் அத்தகைய மோதல் இல்லை.

இதற்கு என்னுடைய உறவை பேணும் அணுகுமுறை தான் காரணம். அரசியல், தனி நபர் வாழ்க்கை அல்லது வர்த்தகம் போன்றவற்றில் நம்பிக்கையின் அடிப்படையில் உறவை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

பிரதமர் மோடியுடனும் என்னுடைய நல்லுறவு நீடிக்கிறது.

அதற்காக ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து உட்பட இதர வாக்குறுதிகளில் இருந்து நான் பின்வாங்கவில்லை. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக பாராளுமன்றத்தில் எங்களுக்கு வாக்குறுதி தரப்பட்டுள்ளது. அவை உயிர்ப்புடன் உள்ளன.

என்னுடைய பொறுப்பான முயற்சிகள் அவர்களுடைய இதயத்தை மென்மையாக்கும் என்று நான் நம்புகிறேன். அரசியல் நிலைமையில் மாற்றம் ஏற்படும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால் அவர் பிஆர்எஸ் என்ற புதிய கட்சி ஆரம்பித்துள்ளது பற்றியோ, கூட்டணியில் இணைந்து கொள்வது பற்றியோ அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, கேட்டுக் கொள்ளவும் இல்லை. எந்த கூட்டணியிலும் ஒரு அங்கமாக நான் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News