இந்தியா
மீண்டும் வன்முறை- மணிப்பூரில் மேலும் 5 நாட்களுக்கு இணையதள சேவைகள் முடக்கம்
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.
- மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் ,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பலர் இறந்தனர். கலவரத்தை அடக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். ராணுவ தளபதி மனோஜ்பாண்டே இன்று மணிப்பூர் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வன்முறை சம்பவங்கள் மேலும் பரவாமல் தடுக்க மேலும் 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.