கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜினாமா கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம்
- நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
- லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து நள்ளிரவிலும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், பயிற்சி மருத்துவர் படுகொலையை மேற்கு வங்க மாநில அரசு, ஆர்ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் கையாண்ட முறை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய கோரி ஜூனியர் மருத்துவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினார்கள். லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து நள்ளிரவிலும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தினர். அப்போது வினீத் கோயல் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பதாகைகள் கையில் ஏந்தி இருந்தனர்.
#WATCH | Kolkata, West Bengal: Junior Doctors continue to sit at the protest site in the Lalbazar area. They have been demanding justice for a woman doctor who was raped and murdered at RG Kar Medical College and Hospital on August 9. pic.twitter.com/HZ7mfOxAE2
— ANI (@ANI) September 3, 2024
#WATCH | A junior doctor says "We will keep sitting here until the Commissioner of Police comes here and tenders his resignation. Our protest will continue until we get to meet the Commissioner of Police..." pic.twitter.com/Wxe8CDO5p2
— ANI (@ANI) September 3, 2024