இந்தியா
தொலைபேசி எண்களின் கோப்புகளாக மாறிய பாஸ்போர்ட்
- வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
- வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு வாலிபர் தனது பாஸ்போர்ட்டை தொலைபேசி எண்களின் கோப்புகளாக மாற்றிய வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் புதுப்பிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவில் பாஸ்போர்ட்டில் காலியாக உள்ள கடைசி பக்கத்தில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில், விசா முத்திரைகளுக்கு பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் வெற்று பக்கங்களை ஒருவர் திருப்புவதையும், அதில் ஏராளமான தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
இந்த வீடியோ 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.