இந்தியா

உலக தூக்க தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பெங்களூரு நிறுவனம்

Published On 2023-03-17 13:15 IST   |   Update On 2023-03-17 13:15:00 IST
  • 2008ம் ஆண்டிலிருந்து மார்ச் 17ம் தேதி உலக தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது.
  • ஊழியர்கள் மற்ற விடுமுறையைப் போலவே இந்த விடுமுறைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.

உலகளவில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று சர்வதேச தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது.

போதுமான தூக்கத்தைப் பெறுவதன் மதிப்பு மற்றும் போதுமான தூக்கம் இல்லாததால் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை தெரிவிக்கும் வகையில், உலக தூக்க தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பெங்களூருவில் உள்ள வேக் ஃபிட் சொல்யூஷன்ஸ் என்கிற நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு உலக தூக்க தினத்தை முன்னிட்டு இன்று விருப்ப விடுமுறையாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேக்ஃபிட் நிறுவனம் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் இன்ப அதிர்ச்சியை அளித்தது. இந்த இமெயிலில்" தனது அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 17ம் தேதி வெள்ளிக்கிழமை உலக தூக்க தினத்தை கடைபிடிக்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் தூக்க நாளை விடுமுறையாகக் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அதனால், ஊழியர்கள் மற்ற விடுமுறையைப் போலவே இந்த விடுமுறைக்கும் விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News