இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை அனுமந்த வாகன உற்சவம் நடந்த காட்சி.

திருப்பதியில் இன்று தங்க தேரோட்டம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

Published On 2023-09-23 10:35 IST   |   Update On 2023-09-23 10:35:00 IST
  • பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
  • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது.

கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர்.

இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

மேலும் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.

இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 72,650 பேர் தரிசனம் செய்தனர். 27,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.

பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News