இந்தியா
தினமும் மது குடிக்கும் ஆடு- வீடியோ வைரல்
- ரவீந்திர ரெட்டி எப்போது மது குடித்தாலும் அவரது ஆடு அருகில் சென்று அவரிடம் மது வாங்கி குடிப்பதை வழக்கமாக்கி கொண்டது.
- ஆடு தள்ளாடி... தள்ளாடி... வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மொடுகுண்டா பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர ரெட்டி. இவர் தனது நிலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது வளர்ப்பு ஆடு அருகில் சென்றுள்ளது. உடனே தனது ஆட்டுக்கும் ஒரு கிளாஸ் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். அதை குடித்த ஆட்டுக்கு பிடித்து போய் விட்டது. ரவீந்திர ரெட்டி எப்போது மது குடித்தாலும் அவரது ஆடு அருகில் சென்று அவரிடம் மது வாங்கி குடிப்பதை வழக்கமாக்கி கொண்டது.
இதனால் அந்த ஆடு தள்ளாடி... தள்ளாடி... வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆடு தள்ளாடி வருவதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.