இந்தியா

பினராயி விஜயன் பயணம் செய்யும் பேருந்துக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்

Published On 2023-11-21 05:58 GMT   |   Update On 2023-11-21 05:58 GMT
  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் பயணம் செய்கிறார்கள்.
  • காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார்.

இந்நிலையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் நவகேரள சதஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் பயணம் செய்கிறார்கள்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகளை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களுக்கு விளக்கி கூறுகிறார்கள். இதற்காக முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் மந்திரிகள் செல்வதற்காக ரூ1.5கோடி மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து வாங்கப்பட்டது.

அந்த பேருந்தில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் கடந்த 18-ந்தேதி தங்களின் பயணத்தை தொடங்கினனர். காசர்கோடு மஞ்சேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பயணம் டிச்பர் 24-ந்தேதி வரையினால 36 நாட்கள் தொடர்ச்சியாக நடை பெறுகிறது.

மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் இந்த பேருந்தில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் செல்கிறார்கள். மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், ரூ1கோடிக்கு சொகுசு பேருந்து வாங்கியிருப்பதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த நவ கேரள சதஸ் பேருந்து கல்லி யச்சேரி தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பழையங்கடி ஏரிபுரம் பகுதியில் நவகேரள சதஸ் பேருந்துக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சி யினர் கருப்புகொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காண்பிக்கும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக முதலி லேயே தகவல் தெரிந்ததால் அங்கு ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் போலீஸ் பாது காப்பை மீறி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் காங்கிர சார் நடத்திய இந்த போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இளைஞர் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் ஏராளமானோர் காய மடைந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கருப்பு கொடி காட்டிய இளைஞர் காங்கிரசார் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

அதில் போராட்டக்காரர் கள் விரட்டி விரட்டி தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. கருப்பு கொடி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும் போது, இது சி.பி.எம். கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் பிரச்சினைகளை கண்டும் காணாமலும், போராட்டக்காரர்களை அடிக்க குண்டர்களை அனுப்பும் முதல்-அமைச்சர் சொகுசு பஸ்சில் செல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது என்றார்.

Tags:    

Similar News