இந்தியா
டி.வி நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை- வாலிபர் கைது
- இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம்,மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் ஜூப்ளி ஹல்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் டி.வி. நாடகங்கில் நடித்து வந்தார். அப்போது பானி தேஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பானி தேஜா இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
இளம்பெண் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.