இந்தியா
மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
- பாராளுமன்றத்தில் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
- சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்னர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் (மக்களவை 4, மாநிலங்களவை 20) செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சுஷிர் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், சுயேட்சை எம்.பி. அஜித்குமார் புயான் ஆகியோர் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.