தீய சக்திகளை எதிர்ப்போம் என உறுதி ஏற்போம்: கட்சி தொடங்கிய தினத்தில் தொண்டர்களுக்கு மம்தா வலியுறுத்தல்
- 1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது.
- மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இன்று அந்த கட்சி தொடங்கிய தினம். 26 ஆண்டுகள் முடிவடைந்து, 27-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.
கட்சி தொடங்கிய நாளில், தீய சக்திகளை எதிர்ப்போம் என கட்சி தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
திரிணாமுல் கட்சிக்காக அர்ப்பணிப்பு மற்றும் சுயத்தியாகம் செய்த ஒவ்வொரு தொண்டருக்கும், ஆதரவாளர்களுக்கும் பணிவுடன் மரியாதை அளிக்கிறேன். இன்று திரிணாமுல் காங்கிரஸ் குடும்பம் அனைவரின் அன்பாலும், பாசத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தளராத ஆதரவின் பலத்தில் மாபெரும் ஜனநாயக நாட்டில் அனைவருக்காகவும் தொடர்ந்து போராடுவோம். எந்த தீய சக்திக்கும் சரணடைய வேண்டாம். அனைத்து பயங்கரவாதத்தையும் மீறி, நமது நாட்டின் பொது மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம்.
1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக உதயமாகிய திரிணாமுல் காங்கிரஸ், 2001 மற்றும் 2006-ல் தோல்வியடைந்தது. அதன்பின் 2011-ல் ஆட்சியை பிடித்தது. அதன்பின் 2016 மற்றும் 2021-ல் அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜி மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக பதவி ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.