இந்தியா
நெற்றியில் பலத்த காயம்-அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி: வெளியான அதிர்ச்சி தகவல்
- மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
- தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.