இந்தியா

42 இடங்களிலும் போட்டி: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பால் தகர்ந்தது காங்கிரஸின் நம்பிக்கை

Published On 2024-02-24 07:49 IST   |   Update On 2024-02-24 07:49:00 IST
  • மேற்கு வங்காளத்தில் ஐந்து தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்.
  • ஆனால் இரண்டிற்கு மேல் ஒரு தொகுதி கூட வழங்க முடியாது என மம்தா கட்சி திட்டவட்டம்.

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மக்களைவை தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

அதனால் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். நாங்களும் தனித்து போட்டியிட தயார் என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

ஆனால் திரணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே காங்கிரஸ் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது.

இதனால் இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மம்தா கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டதாகவும், அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும், மேகலயாவில் ஒரு தொகுதியில் போட்டியிடவும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என காங்கிரஸ் நம்பியிருந்தது. ஆனால், அநத் கட்சியின் தெரிக் ஓ'பிரைன், பைனாகூலர் வைத்து பார்த்தாலும் கூட எங்களாக காங்கிரஸ் கட்சிக்கான 3-வது இடத்தை காண முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மேலும், மம்தா பானர்ஜி அனைதது தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்த முடிவில் உறுதியாக உள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை தகர்ந்துள்ளது.

ஒருவேளை மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகளை பெற்றுக்கொண்டு அசாமில் இரண்டு இடம், மேகாலயாவில் ஒரு இடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட 3-வது மாநிலமாக மேற்கு வங்காளம் திகழ்கிறது. இங்கு இந்தியா கூட்டணி போட்டியில் அது மேலும் கூட்டணிக்கு வலுசேர்க்கும் என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்புகின்றனர்.

Similar News