இந்தியா

சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமனம்

Published On 2023-06-28 22:58 IST   |   Update On 2023-06-28 22:58:00 IST
  • சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவருக்கு முதல் மந்திரி பூபேஷ் பாகெல் வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி:

சத்தீஸ்கர் முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருபவர் டி.பி.சிங் தியோ.

முதல் மந்திரி பூபேஷ் பாகெலும், டி.பி.சிங் தியோவும் இன்று தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், கட்சி மேலிடம் பிறப்பித்துள்ள உத்தரவில், சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.பி.சிங் தியோ நியமிகப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி பூபேஷ் பாகெல் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News