இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி.
- பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து சதி வேலையில் ஈடுபட திட்டமிடுவதை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் அவ்வப்போது முறியடித்து வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் நவ்ஷேராவில் உள்ள லாம் செக்டார் பகுதியில் பங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக வீரர்கள் கண்டுபிடித்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தாக்கல் நடத்த தொடங்கினர். அதனைத் தொடர்ந்து வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு ஏ.கே. 47 உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட. இன்று காலையும் தேடுதல் வேட்டை தொடர்கிறது என ராணுவம் தெரிவித்துள்ளது.