இந்தியா
VIDEO: மொட்டை மாடியில் இளைஞனுடன் ரொமான்ஸ் செய்த மனைவி.. கையும் களவுமாக பிடித்து புரட்டி எடுத்த கணவன்
- இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
- இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் மனைவி இருந்ததை பார்த்த கணவன் ஆத்திரத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள அவர்களின் வீட்டின் மொட்டை மாடியில் தனது மனைவியுடன் இருந்த அந்த இளைஞனை பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரை அடித்தும் உதைத்தும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை மன்னித்து விடுமாறும் இனி அங்கு திருப்பி வரவே மாட்டேன் என்றும் அவர்களிடம் இளைஞன் கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.