இந்தியா

இவைகளை பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?: மேற்கு வங்காள மந்திரி கேள்வி

Published On 2024-02-06 07:35 IST   |   Update On 2024-02-06 07:35:00 IST
  • பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?
  • விவசாயிகள் தற்கொலைகளை பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?

பிரமதர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது டிஜிட்டில் பண பரிவர்த்தனை, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல், பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் குறித்து பேசினார். மேலும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மேற்கு வங்காள மாநில மந்திரி சாஷி பஞ்சா கூறுகையில் "எதிர்மறை வாக்குகளை பெற்று பா.ஜனதா வெற்றி பெற விரும்புகிறதா? இதுதான் எங்களுடைய கேள்வி.

பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?. அதை குறைப்பதற்கு அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்களா?.

விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த பணியாற்றி கொண்டிருக்கிறார்களா? அது பற்றி பிரதமர் மோடியால் பேச முடியுமா?.

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாட்டு மக்கள் மேலும் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் மீது தவறுகளை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

பா.ஜனாதா எதிர்மறை வாக்குகளாலும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகளாலும் வெற்றி பெற முடியும் என பிரதமர் நினைக்கிறார்" என்றார்.

Tags:    

Similar News