இந்தியா

மணிப்பூர் முதல்-மந்திரி யார்? பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

Published On 2025-02-11 15:03 IST   |   Update On 2025-02-11 15:03:00 IST
  • மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது.
  • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.

இம்பால்:

மணிப்பூா் பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைவதற்கான சாத்தியம் இல்லாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தோ்வு செய்வது தொர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் மணிப்பூா் பா.ஜ.க. பொறுப்பாளா் சம்பித் பித்ரா ஆலோசனை நடத்தினாா்.

இந்த கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவா்களாக கருதப்படும் மணிப்பூா் சபாநாகர் தோக் சோம் சத்யபத்ரா, மந்திரிகள் ஒய். கேம்சந்த், பசந்த் குமாா் சிங், கோவிந்தா கோந்தோ ஜம் . பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராதே ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குகி இன பா.ஜ.க. எம்.எல்.ஏ.க் கள் 7 பேர் பங்கேற்கவில்லை. மேலும் மேலிட பொறுப்பாளர் சம்பித் பித்ரா நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்களுடனும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் மற்றும் 3 மந்திரிகள், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இதற்கிடையே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News