கணவனை காப்பாற்ற வந்த மனைவிக்கு 5 பேரால் நேர்ந்த கொடுமை.. புகார் கொடுக்க சென்ற தம்பதியை சிறை வைத்த போலீஸ்
- அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
- நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் 28 வயது விவசாயியை வீடு புகுந்து தாக்கி, அவரது 25 வயது மனைவியை 5 பேர் கொண்ட கும்பல் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிலிபிட் பகுதியில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இரவு விவசாயியின் வீட்டிற்குள் அக்கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தத் துவங்கியது. அவரது மனைவி தனது கணவரைக் காப்பாற்ற முயன்றபோது, அந்த நபர்கள் அவரது ஆடைகளை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின் அந்த தம்பதி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றனர். ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த தம்பதியினர் மீது லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டி 24 மணிநேரம் காவலில் வைத்துள்ளனர்.
அவர்களின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்தபோதிலும் எந்தவிதமான மருத்துவ உதவிகளும் வழங்கப்படாவில்லை. இந்நிலையில் கூடுதல் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட குற்றப்பின்னணி இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. புகாரை ஏற்காத அதிகாரிகள் குறித்தும் தம்பதியினரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.