இந்தியா

வதோதராவில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

Published On 2024-10-06 06:40 GMT   |   Update On 2024-10-06 06:40 GMT
  • ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
  • இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பரை பார்ப்பதற்காக லட்சுமிபுரா பகுதிக்கு இரவு 11 மணியளவில் பைக்கில் சென்றார்.

ஆண் நண்பரை பார்த்து விட்டு அவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். லட்சுமிபுரா பகுதியை கடந்து புறவழிச்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் இவர்களது பைக்கை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் 2 பேர் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் 3 பேர் தொடர்ந்து இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த 2 வாலிபர்கள் இளம் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த இளம் பெண்ணின் ஆண் நண்பர் அவர்களை தடுத்தார். அப்போது ஆத்திரமடைந்த 3 வாலிபர்களில் ஒருவர் ஆண் நண்பரை பிடித்து கொண்டார்.

மற்ற 2 வாலிபர்களும் இளம் பெண்ணை அங்கிருந்து மறைவான இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அவர்களை அங்கேயே விட்டு விட்டு 3 பேர் கும்பலும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து இளம்பெண் வதோதரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வதோதரா புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் ஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் நகர பகுதிகளில் இரவு முழுவதும் நவராத்திரி பண்டிகைக்கான கர்பா கொண்டாட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. கொண்டாட்ட நேரங்கள் மீதான கட்டுப்பாடுகளை குஜராத் அரசு நீக்கியுள்ளது. நள்ளிரவில் கர்பா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்றவர்களால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல் மகராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகர் பகுதியிலும் 21 வயது இளம் பெண் ஒருவரை 3 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சம்பவத்திற்கும் இந்த குற்றச்சாட்டையே கூறப்படுகிறது.

Tags:    

Similar News