விளையாட்டு
பஜ்ரங் புனியா
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் - வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
- சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்கிரேடு:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும்.
2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது