கிரிக்கெட் (Cricket)
null
வளர்ச்சினா இப்படி இருக்கணும்.. டி20 தரவரிசையில் டாப் இடம் பிடித்த அபிஷேக் - வருண் சக்கரவர்த்தி
- டி20 பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் ரவி பிஷ்னாய், 9-வது இடத்தில் அர்ஷ்தீப் உள்ளனர்.
அதன்படி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10-ல் மற்ற இந்திய வீரர்களாக 3-வது இடத்தில் திலக் வர்மாவும் 5-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் உள்ளர். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.