கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளார் ஜெரால்ட் கோட்ஸி விலகல்
- 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடர் வரும் 8-ம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெறவில்லை.
இந்நிலையில் தொடை எலும்பு காயம் காரணமாக கோட்ஸி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.