கிரிக்கெட் (Cricket)

5வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9/1

Published On 2025-01-03 07:21 GMT   |   Update On 2025-01-03 07:21 GMT
  • இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
  • ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 40 ரன்களை அடித்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இன்று துவங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்கம் முதலே இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 40 ரன்களை அடித்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது. இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட உஸ்மான் குவாஜா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Tags:    

Similar News