இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு
- டெல்லி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இங்கு நடந்த 10 இன்னிங்சில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இங்கு நடந்த 10 இன்னிங்சில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அதனால் ரன்ஜாலத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த மைதானத்தில் இந்திய அணி 3 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (நியூசிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது.