பும்ரா இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு: இம்ருல் கெய்ஸ்
- பும்ரா கடந்த 2 வருடம் இந்திய அணிக்கு பங்காற்றிய விதத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.
- அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளது மிகப்பெரியது.
இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளரான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என அந்நாட்டு முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கடந்த மாதம் சிட்னியில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பந்து வீசும்போது, பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை.
அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வருகிற 20-ந்தேதி சந்திக்கிறது. இந்த போட்டியில் பும்ரா இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ருல் கெய்ஸ் கூறியதாவது:-
தலைசிறந்த பந்து வீச்சு அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசையில் இந்தியா பலமான அணி. ஆனால், பும்ரா இந்திய அணியில் இல்லை. கடந்த இரண்டு வருடமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரியது. தற்போது அவர் உடற்தகுதி விசயம் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் அவருடைய ரிதத்தை பிடித்து விட்டால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
சாகிப் அல் ஹசன் சிறந்த வீரர் என்பதால் நான் அவரை தவற விடுகிறேன். எந்த போட்டியிலும் அவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவிலானது. இந்த தருணத்தில் வங்கதேசம் திணறி வருகிறார். சாகிப் இல்லாததால் வங்கதேசம் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாததால் வங்கதேசம் கூடுதல் ஒரு ஸ்பின்னருடன் களம் இறங்கலாம். இது வங்கதேச அணிக்கு பிரச்சனை.
லிட்டோன் தாஸ் ஃபார்ம் அணிக்கு மிப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வங்கதேச ப்ரீமியர் லீக்கின் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். எனினும், சவுமியா சர்கார், தன்ஜித் தமிம் சிறப்பாக விளையாடினர். பேட்டிங் துறையில் அணி சிறந்த வடிவத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு இம்ருல் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.