null
சாம்பியன்ஸ் டிராபி: SA Vs AUS போட்டி மழையால் ரத்து.. யாருக்கு ஆபத்து..
- இந்த போட்டியில் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
- தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதவுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பி பிரிவில் யார் செல்லப் போகிறார் என்பதற்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ராவல்பிண்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் போடுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ராவல்பிண்டியில் இந்த நாளில் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ராவல்பிண்டியில் பெரிய அளவு மைதானத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வசதி இல்லை. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் 20 அல்லது 25 ஓவர்கள் போட்டியாவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பி பிரிவில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு அணிகளும் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சி இருக்கும் தங்களுடைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
உதாரணத்திற்கு தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதேபோன்று ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மூன்று புள்ளிகள் உடன் தொடரை முடிவு செய்யும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதனால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக நடந்தால் மட்டுமே இந்த குழப்பம் தவிர்க்கப்படும்.