சாம்பியன்ஸ் டிராபி பணி செய்ய மறுப்பு: 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் போலீசார் அதிரடி நீக்கம்
- லாகூர் கடாஃபி மைதானம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
- பஞ்சாப் மாகாண போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல் பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. லாகூர் நகர் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளதால் கடாஃபி மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஹோட்டல், வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வருகை, மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லுதல் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு பணியில் அம்மாகாண போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அனால் சில போலீசார் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் சிலர் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பஞ்சாப் மாகாண நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட போலீசாரை அதிரடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதில் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.