null
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
- குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பெங்களூரு:
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து டியாண்ட்ரா டாட்டின் 26, தனுஜா கன்வர் 16 என அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்க உள்ளது.
இறுதியில் டெல்லி அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது . இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றிக்கு பின்னர் புள்ளிப்பட்டியல் நான்காவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு டெல்லி கேப்ட்டல்ஸ் அணி முன்னேறியுள்ளது.