கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

Published On 2025-03-05 14:14 IST   |   Update On 2025-03-05 14:14:00 IST
  • முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
  • 2-வது அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

நேற்று துபாயில் நடைபெற்ற முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று 2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Tags:    

Similar News