கிரிக்கெட் (Cricket)
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: முன்னணி வீரர்களை இழந்து இங்கிலாந்து திணறல்
- இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் தொடங்கியது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் டக் அவுட்டானார். ஜாக் கிராலி 17 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, நாத்ன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.