கிரிக்கெட் (Cricket)
null

இந்தியா என்றாலே அடிப்பாரு.. டிராவிஸ் ஹெட்டுக்கு பில்டப் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்

Published On 2025-03-04 08:32 IST   |   Update On 2025-03-04 08:40:00 IST
  • வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது.
  • இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது.

2023-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது. வருண் சக்ரவர்த்தி மட்டுமல்ல மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் திறமையானவர்கள் தான். அவர்களின் பந்து வீச்சை நாங்கள் அடித்து நொறுக்க வேண்டும். அதை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

பெரிய போட்டிகளில் ஆடும் போது நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் இது போன்ற ஆட்டங்களில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் (மழையால் பாதியில் ரத்து) அருமையாக பேட் செய்தார். இந்த ஆட்டத்திலும் அதே போல் ஆக்ரோஷமாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

இந்தியா இங்கே எல்லா ஆட்டங்களிலும் விளையாடியது தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் பிட்ச் என்ன செய்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார்கள். அது ஒரு சாதகமா என்று எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு ஸ்மித் கூறினார்.

Tags:    

Similar News