பிங்க்-பால் என்பதை நினைவில் வைக்க வேண்டும்: இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை
- அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
- அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.
இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.