கிரிக்கெட் (Cricket)

Video: முகத்தை பதம் பார்த்த பந்து.. இரத்த காயத்துடன் வெளியேறிய வீரர் - பரபரப்பு

Published On 2025-02-09 10:52 IST   |   Update On 2025-02-09 10:52:00 IST
  • மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.
  • மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. முத்தரப்பு தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திரா காயமுற்றார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்களை குவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து 331 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி 38-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா எதிர்கொண்டார். நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.

இதில் கேட்ச் வாய்ப்பை துரத்தி வந்த ரச்சின் ரவீந்திரா அதனை விக்கெட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பந்து நேரடியாக அவரது முகத்தை தாக்கியது. இதில் பலத்த காயமுற்ற ரச்சின் ரவீந்திரா இரத்த காயத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். காயமுற்ற ரச்சின் ரவீந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டியில் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.



Tags:    

Similar News