கிரிக்கெட் (Cricket)

மழையால் 3 போட்டிகள் ரத்து: ரசிகர்களுக்கு டிக்கெட் தொகை திரும்ப வழங்கப்படும்- பிசிபி

Published On 2025-03-01 19:58 IST   |   Update On 2025-03-01 19:58:00 IST
  • இரண்டு போட்டிகள் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
  • பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட்டின் முழுத் தொகையும் ரசிகர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி ஆகியவற்றிற்கான டிக்கெட் பணம் திருமப் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துளளது.

மார்ச் 25-ந்தேதி ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மழைக் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

27-ந்தேதி பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியும் மழைக்காரணமாக டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று (பிப்ரவரி 28-ந்தேதி) ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கீட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டது.

Tags:    

Similar News