கிரிக்கெட் (Cricket)

2 டிக்கெட் வாங்கினால் ஜெர்சி இலவசம்.. சன்ரைசர்ஸ் அணியின் சூப்பர் அறிவிப்பு

Published On 2025-03-07 13:49 IST   |   Update On 2025-03-07 13:49:00 IST
  • ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் தொடங்குகிறது.
  • ஐ.பி.எல். தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளன.

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கும் ரபோது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 


மேலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



Tags:    

Similar News