கிரிக்கெட் (Cricket)

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் இந்திய முன்னாள் கேப்டன்

Published On 2025-03-07 09:50 IST   |   Update On 2025-03-07 09:50:00 IST
  • கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
  • கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மைதானத்தில் பவுண்டரி, சிக்சர் என்று ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களாகி வருகிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 'ராபின் ஹுட்' என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் நடிகராக மாறி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்குலி நடிக்க இருப்பதாகவும், ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் வெப் தொடரில் நடிக்கின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடிப்பதாக தகவல். கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Tags:    

Similar News