பாரிஸ் ஒலிம்பிக் 2024

நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்தியர்கள்

Published On 2024-08-04 06:45 GMT   |   Update On 2024-08-04 06:45 GMT
  • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.
  • தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3-வது பதக்கத்தை நூலிழையில் தவற விட்டார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவிலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தார். வெண்கல பதக்கம் பெற்றார்.

இந்த ஒலிம்பிக்கில் மனுபாக்கருக்கு முன்பு அர்ஜூன் பபுதா நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தார். துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவர் 4-வது இடத்தை பிடித்தார்.

மேலும் நேற்று முன்தினம் லப்பு அணிகள் வில்வித்தை பிரிவில் தீரஜ்- அங்கிதா பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

கடந்த காலங்களில் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் (400 மீட்டர் ஓட்டம்), 1984 சியோல் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா (400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி (பளு தூக்குதல்), லியாண்டர் பெயஸ்-மகேஷ் பூபதி ( டென்னிஸ் இரட்டையர்) ஜோடி ஆகியோர் 4-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டு இருந்தனர்.

அணிகள் பிரிவில் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியும் 4-வது இடத்தை பிடித்து இருந்தது.

Tags:    

Similar News