விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி
- இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா-மிட்சுஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை இழந்த சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.