விளையாட்டு
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சிந்து போராடி தோல்வி
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது.
- 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் சிந்து தோல்வியடைந்தார்.
பாசெல்
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 49-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ். பிரனாயை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-5, 21-16 என்ற நேர் செட்டில் டென்மார்கின் ஜோகன்சனை பந்தாடி அடுத்த சுற்றை எட்டினார்.
பெண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 17-வது இடம் வகிக்கும் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து 17-21, 19-21 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் (டென்மார்க்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.