விளையாட்டு
null

அமெரிக்க தடகள போட்டி: சென்னை வீராங்கனை புதிய தேசிய சாதனை

Published On 2025-03-03 14:41 IST   |   Update On 2025-03-03 15:12:00 IST
  • அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகெர்க்கியில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
  • இதில் சென்னையை சேர்ந்த கிருஷ்ணா ஜெய்சங்கர் கலந்து கொண்டு குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.

சென்னை:

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகெர்க்கியில் தடகள போட்டிகள் உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் சென்னையை சேர்ந்த கிருஷ்ணா ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அமெரிக்காவில் படித்து வரும் அவர் நேவடா பல்கலைக் கழக அணிக்காக பங்கேற்றார்.

குண்டு எறியும் வீராங்கனையான கிருஷ்ணா புதிய சாதனை படைத்தார். 22 வயதான அவர் 16.03 மீட்டர் தூரம் எறிந்தார். உள்ளரங்க போட்டிகளில் இது புதிய தேசிய சாதனையாகும். அவர் தனது கடைசி முயற்சியில் இந்த அளவை தொட்டார். 16.03 மீட்டர் எறிந்ததன் மூலம் கிருஷ்ணாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சாதனை படைத்த கிருஷ்ணா இந்திய கூடைப்பந்து நட்சத்திரங்களான ஜெய்சங்கர் மேனன்-பிரசன்னா தம்பதியின் மகள் ஆவார்.

Tags:    

Similar News