தமிழ்நாடு

ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம்

Published On 2024-09-05 10:08 IST   |   Update On 2024-09-05 11:13:00 IST
  • சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
  • தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 3-ந் தேதியன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈட்டன் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அஷ்யூரன்ட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News