செய்திகள்
கிருஷ்ணகிரி: விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் இன்று மரணம் - பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில் விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்து உள்ளது.
சேலம்:
கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் மாலூருக்கு தனியார் பஸ் சென்றது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர்.
பஸ்சை தளி அருகில் உள்ள பின்னூரை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 35) ஓட்டி வந்தார். இந்த பஸ் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூளகிரி பக்கம் இருக்கும் மேலுமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 17பேர் இறந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் உடனே அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த டிரைவர் வெங்கட்ராஜ் உள்பட 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் டிரைவர் வெங்கட்ராஜ் இன்று அதிகாலை இறந்தார்.
இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவர் வெங்கட்ராஜ் இறந்ததை அடுத்து பஸ்-லாரி மோதல் விபத்தில் சாவு எண்ணிக்கை 18ஆக உயர்ந்து உள்ளது.