செய்திகள்
ஆரணியில் 5 கடைகளில் ரூ.1.60 லட்சம் கொள்ளை: மின்வெட்டு நேரத்தில் மர்ம கும்பல் கைவரிசை
ஆரணியில் தொடர்ந்து 5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது.
ஆரணி:
ஆரணி மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் வேளாண்மை எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை, ஓட்டுநர் பயிற்சி பள்ளி, உரக்கடை உள்பட 5 கடைகள் மற்றும் கடைகளின் அலுவலகங்கள் உள்ளன. நேற்றிரவு வழக்கம் போல் கடைகளை பூட்டி விட்டு உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றனர்.
நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் கடைகள் உள்ள அந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி கொள்ளை கும்பல் ஒன்று, வணிக வளாகத்திற்குள் புகுந்தது. முதலில் வேளாண்மை எந்திர உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே புகுந்தது. அங்கிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தது.
பிறகு, அடுத்துள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் புகுந்து ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது. இதையடுத்து அடுத்தடுத்துள்ள உரக்கடை உள்பட 3 கடைகளின் பூட்டையும் உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
இன்று காலையில் கடைகளுக்கு வந்த அதன் உரிமையாளர்கள் பணம், பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கொள்ளை போன ரூ.1.50 லட்சம் பணத்தை அதன் உரிமையாளர் முனீர் அகம்மது என்பவர் தன்னுடைய மகனின் திருமண செலவிற்காக தயார் செய்து வைத்திருந்தார்.
சில நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் பணம் கொள்ளை போனது முனீர் அகம்மதுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வேளாண்மை எந்திர உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்த வெப்-கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ஆனால், நள்ளிரவில் பெய்த மழையின் போது மின் வெட்டு ஏற்பட்டு இருந்ததால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் கொள்ளையர்களின் அடையாளங்கள் கேமிராவில் சுத்தமாக பதிவாகவில்லை. இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.