செய்திகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் 28-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விருதுநகர்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 28-ந்தேதி முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர், தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவில் இருக்கும் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
காவல் தெய்வங்களான பைரவமூர்த்தி, காளியம்மன், பேச்சியம்மன், பிலாவடி கருப்பணசாமி ஆகியவற்றுக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிசேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான தாணிப் பாறையில் தற்காலிக கடைகள், குடில்கள், கார் நிறுத்துமிடங்கள், அன்னதான கூடங்கள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன.
பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார், மதுரை மாவட்ட போலீசார் ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்துக்குமரன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.